கஞ்சா விற்பனை: இருவர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் லட்சுமிபுரம் ஐய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் இரண்டு பேர் ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.

இருவரும் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து சென்னை குன்றத்துாரை சேர்ந்த முகமது அப்பாஸ், 26; லட்சுமிபுரத்தை சேர்ந்த அருண்குமார், 22; ஆகியோரை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement