கோவில் நிலங்களுக்கு பட்டா கிடையாது: நயினார் நாகேந்திரன்
-நமது நிருபர்-
திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா வழங்க முடியாது. ஆனால், 60, 70 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குறைந்த வாடகை அடிப்படையில் அவர்களும், அவர்களது வாரிசுகளும் தொடர்ந்து வசிக்க உரிமை வழங்குவதில் பாஜகவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
பழனி கோவில் நிலம்: பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இதுதொடர்பாக அரசு மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மின்துறை: தமிழகத்தில் மின்சாரம் போதுமான அளவில் இருந்தாலும், மின்வாரியத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால் சேவை பாதிக்கப்படுகிறது. உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஊழல்: தமிழகத்தில் ஊழல் இல்லை என்ற அரசின் கூற்று ஏற்க முடியாது. பழனி கோவில் நில விவகாரம் போன்ற சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
டாஸ்மாக்: டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவிகள், பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கூடுதல் தொகை வசூல் குறித்த புகார்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
மேகதாது அணை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த விவகாரத்தை பிரதமரிடம் பாஜக வலியுறுத்தும்.
செய்தியாளர்களுக்கு அனுமதி: அரசு நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அண்ணாமலை: அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் அமைப்பு அவரது தனிப்பட்ட முடிவு. அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
மருத்துவ காப்பீடு: மத்திய அரசின் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
உள்வாடகைக்கு அமைதி மார்கத்தினர் அல்லது குருமா வகையரா எடுப்பர். பின் ஒன்றும் செய்ய முடியாது