குடிநீரால் நோய் தொற்று விவசாயிகள் குற்றச்சாட்டு

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்கூட்டம் தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது.

தங்கலாசேரி விவசாயி முத்துப்பாண்டி பேசுகையில், ‘‘தங்கலாச்சேரியில் ஒரு மாதமாக குடிநீர் மாசு படிந்து கலங்கலாக வருகிறது. நோய் தொற்று பரவும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

உச்சபட்டி, வாகைகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் முட்புதர்கள் பெருமளவில் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் நீர் தேங்காமல் மாசடைகிறது. முட்புதர்களை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ‘‘சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தாசில்தார் முத்து லட்சுமி தெரிவித்தார்.

Advertisement