எண்கள் சொல்லும் செய்தி

1,80,000





நாட்டின் டயர் தயாரிப்புக்கான தேவையை பூர்த்தி செய்ய வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 1,80,000 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1,570





குஜராத்தில் 1,570 கோடி ரூபாயில் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

25,00,000




இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு துறை 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும், செல்போன் தயாரிப்பில் பெண்கள் 70 சதவீதம் பங்களிப்பார்கள் எனவும் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

28,000




உள்நாட்டு அணு மின் உலை திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய இ.பி.சி., ஒப்பந்த டெண்டரை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.

4.3




சீனாவின் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி 4.5 - 5 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 4.3 சதவீதமாக பதிவாகியிருப்பது அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என சீனா யோசித்து கொண்டுள்ளது.

Advertisement