மீனாட்சி கோயிலில் இன்று முதல் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம் இன்று அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு கொடி ஏற்றப்படும். கொடியேற்றம் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடப்பது சிறப்பு. அதில் சித்திரைத் திருவிழா வரிசையில் ஆடி முளைக்கொட்டு திருவிழா சிறப்பு வாய்ந்தது. விவசாயம் வளம் பெறும் வகையில் நடக்கும் இத்திருவிழா ஜூலை 25 வரை நடக்கிறது. தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் கோயிலின் ஆடி வீதியில் வலம் வருவர். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் 'கொட்டு மேளம்' என்ற சிறப்பு இன்னிசையை நிகழ்த்துவர்.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவின் ஆறாம் நாள் வெள்ளி கிளி வாகனம், 9ம் நாளில் புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா, 9ம் நாளில் அம்மன், சுவாமியின் ஜடா மகுட கிரீடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் புறப்படுவார்.
7ம் நாள் புறப்பாட்டில் அம்மன் பூப்பல்லக்கில் சுவாமிக்கு எதிரே நின்று மாலை மாற்றிக் கொள்வார். தீர்த்தவாரி உற்ஸவத்தில் அம்மனை வீணை மீட்டும் அலங்காரத்தில் தரிசிக்கலாம். சயன சேவையில் 10ம் நாளில் கனக தண்டியலில் அம்மன் காட்சி தருவார். மற்ற உற்ஸவங்களில் வாகனங்களில் நின்றும், அமர்ந்தும் வருவார்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்