நிறுவன செய்திகள்
வர்தனா பைனான்ஸை வாங்கும் டி.வி.எஸ்., வேணு குழும நிறுவனம்
டி.வி.எஸ்., வேணு குழுமத்தை சேர்ந்த 'ஹோம் கிரெடிட் இந்தியா' நிறுவனம், வர்தனா பைனான்ஸ் நிறுவனத்தை 967 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்நடவடிக்கை வாயிலாக, சில்லரை வர்த்தக கடன் உட்கட்டமைப்பு பலமடங்கு உயரும் என கூறப்படுகிறது.
மும்பையில் புதிய வீட்டு திட்டம் ரேமண்ட் ரியாலிட்டி கூட்டணி
ரேமண்ட் ரியாலிட்டி நிறுவனம், மும்பையில் 8,500 கோடி ரூபாய் வருவாய் வரக்கூடிய சொகுசு வீடு திட்டத்தை உருவாக்குவதற்காக, நில உரிமையாளர் ஒருவருடன் கூட்டணி அமைத்துள்ளதாக, பங்கு சந்தைகளிடம் சமர்ப்பித்துள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், அந்த நில உரிமையாளரின் பெயரை அந்த ஆவணத்தில் இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.
பேட்டரி ரசாயன வினியோகம்; 'அனுபம் ரசாயன்' புதிய ஒப்பந்தம்
அனுபம் ரசாயன் நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பு ரசாயன பொருட்களை வினியோகம் செய்வதற்காக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாஸ்க்வோல்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கூட்டு ஒப்பந்தம் வாயிலாக, வரும் ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 2,525 கோடி ரூபாய் ஒட்டுமொத்த வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் புதிய சிமென்ட் ஆலை; அடிக்கல் நாட்டியது டால்மியா பாரத்
டால்மியா பாரத் நிறுவனம், ஆந்திர பிரதேசத்தின் கடப்பா பகுதியில் 3,100 கோடி ரூபாய் முதலீட்டிலான தங்களின் இரண்டாவது உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. இப்புதிய ஆலை வாயிலாக, தென்னிந்திய சந்தைகளுக்கான நிறுவனத்தின் உற்பத்தித் திறன் மற்றும் வினியோக கட்டமைப்பு மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டும் தொழிலில் தடம் பதிக்க டாடா திட்டம்
டாடா குழுமம், கேரளத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதன் வாயிலாக, அந்த தொழிலில் முதல் முறையாக தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார். இத்திட்டம் நிறைவேறினால், ஏற்கனவே காபி முதல் சொகுசு கார்கள் வரை தயாரிக்கும் இந்த குழுமத்திற்கு, இது ஒரு புதிய வர்த்தகமாக அமையும்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்