கொலை வழக்கில் ஜாமினில் தலைமறைவானவர் கைது
கடலுார்: கடலுாரில் முன்னாள் ஊராட்சி தலைவரின் சகோதரர் கொலை வழக்கில் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், தாழங்குடாவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. முன்னாள் ஊராட்சி தலைவர். இவருக்கும், அதே பகுதி மதியழகனுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக மாசிலாமணி தம்பி மதிவாணனை கடந்த, 2020ம் ஆண்டு மதியழகன் மற்றும் அவரது தரப்பினர் கொலை செய்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. படகுகள், மீன்பிடி வலைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்து கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, தாழங்குடா முகிலன், அரசகுமார்,36; உட்பட 20க்கும் மேற்பட்டோரை பேரை கைது செய்தனர். இவ்வழக்கு கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்– 3ல் நடக்கிறது.
இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அரசகுமார் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் பதுங்கியிருந்த அரசகுமாரை தேவனாம்பட்டிணம் போலீசார் நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்