ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா; மத்திய அரசிடம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் ஜவுளி மற்றும் கைத்தறி துறையை மேம்படுத்த, மத்திய அரசின் நிதியுதவி மற்றும் திட்ட ஒப்புதல்களை வலியுறுத்தி, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, டில்லியில் சந்தித்து மனு அளித்தார்.
அவர் அளித்த கோரிக்கை மனுவில், ஈரோடில் பிரத்யேக விசைத்தறி பூங்கா, காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம்; தொடக்க தொழில் முனைவோருக்கான சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல் என, 20 அம்ச கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், டில்லியில் 49 லட்சம் ரூபாய் செலவில், நவீன மயமாக்கப்பட்ட 'கோ- - ஆப்டெக்ஸ்' நிறுவனத்தின், 'புதுப்பாவு' விற்பனை நிலையத்தை, தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்