விபத்தில் இறந்த வாலிபர் கண்கள் தானம்
எரியோடு: குஜிலியம்பாறை ஆனைகவுண்டன்பட்டி ஐயப்பன் 25, விருத்தாச்சலம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு குஜிலியம்பாறை சென்று விட்டு மீண்டும் டூவீலரில் நண்பர் விஜயக்குமார் 23, உடன் ஊர் திரும்பினார்.
புளியம்பட்டி பேர்நாயக்கன்பட்டி ரோட்டில் இவரது நண்பர்களான சரவணன் 18, விக்னேஸ்வரன் 19, ஆகியோர் சென்ற டூவீலருடன் மோதியது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்பன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காயமடைந்த சரவணன், விக்னேஸ்வரன், விஜயகுமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த ஐயப்பன் ஏற்கனவே கண் தானத்திற்கு பதிவு செய்திருந்ததால் மதுரை மருத்துவமனையில் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement