அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
இதனையொட்டி, காமராஜ் சாலை -அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், நேரு, வையாபுரி மணிகண்டன், அழகானந்தம், மோகன்தாஸ் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி புதிய நீதிகட்சி சார்பில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளர் தேவநாதன், பொன் நடராஜன், வேள்பாரி, ராஜேந்திரன், கேசவன், சரவணன், ரவிச்சந்திரன், சேகர், இளங்கோ, வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement