குழாய் உடைந்து பல்லாக்குழியான ரோடால் வாகன ஓட்டிகள் தவிப்பு
வடமதுரை, ஜூலை 16-
வடமதுரையில் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் ரோட்டின் கீழே செல்லும் காவிரி குழாய் உடைந்து கொப்பளிக்கும் நீரால் ரோடு பல்லாக்குழியாக மாறியுள்ளது.
வடமதுரை பகுதிக்கான காவிரி குடிநீர் திட்ட குழாய் பாதை எரியோட்டில் இருந்து வடமதுரை வரை ரோட்டோரம் விளிம்பில் பதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை, வடமதுரை ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும் போது இந்த குடிநீர் குழாய் பாதை உடைவது வாடிக்கையாக உள்ளது. இங்கு கொப்பளிக்கும் நீர் ரோட்டை குண்டும், குழியுமாக மாற்றி விடுகிறது.
இந்த ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கில் பஸ்கள், சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் பயணிக்கும் நிலையில் இந்நிலை கண்டு அனைவருமே வேதனையடைகின்றனர். இந்த ரோட்டில் நீர் கசிவு, பள்ளங்கள் இருப்பதை கண்டதும் வலப்புறமாக சென்று வாகனங்களை இயக்கி செல்லும்போது எதிர்திசை வாகனங்களுடன் விபத்து ஆபத்து அதிகரிக்கிறது.
எனவே குழாய் உடைப்பு ஏற்படாத வகையில் ஸ்திரமான கட்டமைப்புகளை இங்கு ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்