ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.98 லட்சம் மோசடி: தமிழக தம்பதிக்கு போலீசார் வலை
அரியாங்குப்பம்: ரியல் எஸ்டேட் தொழில் அதிபரிடம் 98 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் காந்திஜி நகரை சேர்ந்தவர் தமிழ்மலர்செல்வன், 52; ரியல் எஸ்டேட் ஏஜென்சி நடத்தி வருகிறார். வானுார் அடுத்த கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் செந்தமிழ் இவரது மனைவி பிரேமா இருவரும் சேர்ந்து தொழில் செய்வதற்காக, தமிழ்மலர்செல்வனிடம் கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டு வரை ரொக்கமாகவும், மற்றும் வங்கி மூலமாக 3 கோடி ரூபாய் கடனாக வங்கியிருந்தனர்.
அதற்காக தமிழ்மலர் செல்வன் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் பேரில் இரண்டு இடத்திற்கு செந்தமிழ் பவர் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், கொடுத்த பணத்தில் இருந்து பல்வேறு தவணைகள் மூலம் தமிழ்மலர்செல்வன் குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளார். மேலும், தர வேண்டிய 98 லட்சம் ரூபாய் பாக்கி பணத்தை தராமல் தம்பதியினர் காலம் கடத்தி வந்தனர். இதற்கிடையில் அவர் கொடுத்திருந்த பவர் பத்திரத்தை ரத்து செய்ததுடன் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.
கடந்த 13ம் தேதி பணத்தை கேட்க செந்தமிழ் வீட்டுக்கு சென்ற தமிழ்மலர்செல்வனை அவர் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, தமிழ்மலர்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் செந்தமிழ் அவரது மனைவி பிரேமா மீது மோசடி வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்