மூலிகையில் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில் மூலிகையில் இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் ஒருநாள் பயிற்சி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் சார்கோல் சோப்பு, சங்கு பூ முக ஜெல், போன்ற இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரித்தல், ஆயுஷ் சான்றிதழ் மற்றும் காஸ்மெட்டிக் சான்றிதழ் பெறும் வழிகள், பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் முறைகள், இ-காமர்ஸ் மற்றும் நேரடி சந்தை குறித்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.1,500 ஆகும். மேலும் விபரங்களுக்கு 74184 70345, 94877 12210 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

---

Advertisement