சுகாதாரத்துறை செயலர் அதிரடி மாற்றம்
சுகாதாரத்துறை செயலர் அதிரடி மாற்றம்
புதுச்சேரியில், கடந்தாண்டு இறுதியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.200 கோடி அளவிற்கு போலிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் அடங்குவதற்குள், கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடித்து சீல் வைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலைக்கு தமிழக பகுதியில் உள்ள குடோனில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 வகை மருந்துகள் போலியாக தயாரித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறையின் செயலரான சவுத்ரி முகமது யாசின் நேற்று அதிரடியாக மிசோராம் மாநிலத்திற்கு மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடந்தாண்டு ஜூலை 14ம் தேதி புதுச்சேரி சுகாதாரத்துறை செயலராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
-
ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்
-
வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்
-
உள்ளூர் கொள்முதலால் பாக்கு விற்பனை அமோகம்; சாகுபடி பரப்பும் அதிகரிப்பு
-
காமராஜர் துறைமுக சரக்கு திறன் 7 கோடி டன்களாக அதிகரிப்பு; 2047ல் 25 கோடி டன்னுக்கு உயர்த்த இலக்கு
-
பிரிட்டனுக்கு வரியின்றி ஸ்டீல்; 11 லட்சம் டன் ஏற்றுமதி வாய்ப்பு