ஸ்கூட்டி மீது கார் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம்,70; கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ராஜாமணியின் ஹோண்டா ஸ்கூட்டியில், ராஜாமணி, ஆரோக்-கியம், இருவரும் கடந்த மே 8ல் வேலைக்கு சென்றனர். சேலம்- அரூர் ரோட்டில் உள்ள இருளப்பட்டியில் சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த கார் மோதியது.

இதில் ஆரோக்கியம் படுகாயம் அடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைவலி எடுத்து மயக்கம-டைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று மாலை உயிரிழந்தார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement