பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: பால் கொள்முதல் விலையை உயர்த்தகோரி, தமிழக விவசாயி கள் சங்கத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர்கள், நேற்று தர்மபுரி பி.எஸ்.என்.எல்.,
அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, பொரு-ளாளர் பழனி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். இதில், ஆவின் பால் கொள்முதல் விலையை, பசும் பால் லிட்டருக்கு, 50 ரூபாய், எருமை பால், 60 ரூபாய் என விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.ஊக்கதொகையாக லிட்டருக்கு, 5 ரூபாய் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை, 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
பால் ஏற்றும்போதே பாலின் தரம் மற்றும் அளவுகளை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தினர்.
மேலும்
-
நிறுவன செய்திகள்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
ஜவுளி தொழிலில் முதலீடு ஈர்க்க தமிழக அரசு பேச்சு
-
மீனாட்சி கோயிலில் இன்று முதல் ஆடி முளைக்கொட்டு உற்ஸவம்
-
மதுரையில் ஆன்லைன் மூலம் பலவிதங்களில் பணமோசடி; இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் புகார்கள் அதிகரிப்பு
-
நுகர்வு போதை கலாசாரத்தால் சீரழியும் மாணவர்கள்; வீட்டிலும், பள்ளியிலும் கண்காணிப்பது எப்படி