பிரிட்டனுக்கு வரியின்றி ஸ்டீல்; 11 லட்சம் டன் ஏற்றுமதி வாய்ப்பு

புதுடில்லி: இந்தியா -- பிரிட்டன் இடையிலான விரிவான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆண்டுக்கு 11 லட்சம் டன்னுக்கும் அதிகமான ஸ்டீலை இந்திய ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி வரியின்றி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரிட்டன் விதித்திருந்த ஸ்டீல் இறக்குமதி கட்டுப்பாடுகளின் கீழ், இந்தியாவுக்கான ஸ்டீல் இறக்குமதி ஒதுக்கீடு 1,68,029 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டு திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேகமாக 9.45 லட்சம் டன் ஸ்டீல் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement