அங்கன்வாடி மையத்தில் திருட்டு
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் அங்கன்வாடி மைய ஜன்னலை உடைத்து குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோட்டக்குப்பம், தைக்கால் திடல் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் அந்த அங்கன்வாடி மையத்தின் ஜன்னல் கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement