சென்னை நோயாளிகளின் நம்பிக்கையுடன் 5-ம் ஆண்டில் 'எப்பியோன்'

சென்னை:எழும்பூரில் செயல்படும், 'எப்பியோன்' வலி நிவாரண மேலாண்மை மையம், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இம்மையத்தில், முழங்கால், முதுகு, கழுத்து, தோள்பட்டை, இடுப்பு வலி உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளுக்கும், முக நரம்பு வலி, நீரிழிவு காரணமான நரம்பு வலி, ஒற்றைத் தலைவலி, மார்புப் பகுதி நரம்பு வலி உள்ளிட்ட பல்வேறு வலி தொடர்பான பாதிப்புகளுக்கும், அறுவை சிகிச்சையின்றி நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சென்னை மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர், கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் மீது நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி. நோயாளிகளின் நம்பிக்கையே தங்களின் மிகப்பெரிய பலம், அதே அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் தரமான வலி நிவாரண மேலாண்மை சேவையை தொடர்ந்து வழங்குவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement