வலிப்பு நோயால் ஒருவர் பலி
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே ஆண் நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு எல்லத்தரசு பகுதி தென்னந்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் நபர் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
அதில் இறந்தவர், மரக்காணம் அடுத்த அனிச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 56; என்பதும், வலிப்பு நோயால் கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement