‘போக்சோ’ வழக்கில் கைதான வாலிபருக்கு ‘குண்டாஸ்’
கடலுார்: பண்ருட்டியில் ‘போக்சோ’ வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி, காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஜயகணபதி,28; இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள விஜயகணபதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்
Advertisement
Advertisement