சிதம்பரம் அருகே வாலிபர் கழுத்தறுத்து கொலை

புதுச்சத்திரம்: சிதம்பரம் அருகே டிப்ளமோ பட்டதாரி கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வாண்டையாம்பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவியரசன், 32; டிப்ளமோ பட்டதாரி. வெளிநாடு சென்று திரும்பியவர் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 7: 35 மணிக்கு, இவர் ஸ்கூட்டியில் பெரியபட்டிலிருந்து, காய்கறிகள் வாங்கி கொண்டு வாண்டையாம்பள்ளம் நோக்கி வந்தார்.

அப்போது புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிபள்ளம் கந்தசாமி பூசாரி முந்திரி அருகே, மர்ம நபர் அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

உடன் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, கவியரசன் படுகாயமடைந்து இறந்து கிடந்தார்.

தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் ஸ்கூட்டி, கொலைகாரன் பயன்படுத்திய பைக், கத்தி மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

@block_B@ கொலைகாரன் விட்டு சென்ற பல்சர் பைக் மற்றும் செல்போனை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், பைக் மற்றும் மெபைல் போன் வாண்டையாம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டனுடையது என்பதும், மணிகண்டனுடைய மனைவிக்கும், கவியரசனுக்கு நட்பு நீடித்ததால், கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.block_B

Advertisement