ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க பயணிகள் வலியுறுத்தினர்.

திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பகுதியில் இருந்து 2 கி.மீ.,ல் ஆர். எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. திருச்சி– ராமேஸ்வரம் செல்லும் பெரும்பாலான பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே நின்று செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் ஆர்.எஸ். மங்கலம் பஸ்ஸ்டாண்ட் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ்ஸ்டாப் பகுதிக்கு சென்று பயணிகள் அவதியடைகின்றனர். இந்த கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாப்பை ஏராளமான பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பயன்படுத்தி வரும் நிலையில் பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்குடை வசதி இல்லாததால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மும்முனை சந்திப்பு கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாப் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

––

Advertisement