போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

காவல்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டாக ஆய்வு செய்து விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீ ரஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement