பணி ஆணை வழங்கும் விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவும் நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஜான்சன் லிப்ட் பிரைவேட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி தர்மேந்திரன், இன்ஜினியர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஐ.டி.ஐ., முதல்வர் நுார் முகமது வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் கண்டாச்சிபுரம் மின்சார அலுவலக உதவி மின் பொறியாளர் விவேக் பங்கேற்றார்.

இந்த கல்வியாண்டில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஜான்சன் லிப்ட் கம்பெனியில் பயிற்சியில் சேர 20 முன்னாள் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

துணை முதல்வர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்

பயிற்சி அலுவலர் குமரேசன் ஆனந்த் பாலசுப்ரமணி மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் ஜெயராஜேந்திரன் செய்தார். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்.

Advertisement