இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
1. விபத்து அபாயம்: திண்டுக்கல் –- குமுளி பைபாஸ் ரோடு, வீரபாண்டி பிரிவில் சாலைகள் பிரிந்து செல்லும் இடங்களில் இருந்த தடுப்புசுவர்கள் சேதமடைந்து மண் மேடாக உள்ளது. இப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் தடுப்பு இன்றி உள்ளதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தடுப்புசுவர்கள் சீரமைக்க வேண்டும்.
கே. ராஜ்குமார், வீரபாண்டி.
2. ரோட்டில் தேங்கும் கழிவுநீர்: கண்டமனூர் அருகே அண்ணாநகரில் கழிவுநீர் செல்ல கட்டமைப்பு வசதி இன்றி உள்ளதால் ரோட்டிலேயே கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்வோர் மீது கழிவுநீர் பட்டு சிரமத்திற்குள்ளாகின்றனர். சாக்கடை வசதி செய்திட வேண்டும்
டி. சுரேந்தர், அண்ணாநகர்.
3. சேதமடைந்த அரசு கட்டடம்: தேனி கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சிமென் ட் சிலாப் பூச்சு பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால் கட்டடத்திற்கு கீழே நிற்பவர்கள் மீது சிமென்ட் பூச்சுகள் விழுந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே. வசந்த், தேனி.
4. ஆபத்தான மின்கம்பம்: போடி அருகே சிலமலை ஊராட்சி, சூலப்புரம் மேற்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்றிட பல மாதங்களாக மக்கள் கோரியும் பயன் இல்லை. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பம் மாற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.ஜங்கால், சூலப்புரம்.
5 பஸ் ஸ்டாண்டில் ஆபத்து: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில் பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டிய கழிவுநீர் கால்வாயில் மேல் மூடி இல்லாததால் நடந்து செல்லும் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்பகுதியில் வடிகால் மேல்மூடி அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே. மகேஸ்வரி, ஆண்டிபட்டி.
6. சேதமான தாங்குதானம்: பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் தெருவில், அதிக ஒயர்கள் செல்லும் மின்கம்பத்தின் தாங்குதானம் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் சாய்ந்து வருகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ராஜா, பெரியகுளம்.
7. கழிவு நீரால் சுகாதாரக்கேடு: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் வார்டுக்கு செல்லும் நடைபாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. சாக்கடை அடைப்பால் மேல் மூடிகள் வழியாக வெளியேறி நடைபாதையில் தேங்குகிறது. கழிவு நீர் மீதே நடந்து செல்வதால் சீரமைக்க வேண்டும்.
ஏ. அகல்யா, ஆண்டிபட்டி.
மேலும்
-
கடலுாரி்ல் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை: அமைச்சர் ஆனந்த் தகவல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவரானார் ஆன்டி பர்னம்: விரைவில் பிரதமராக பதவியேற்பு
-
எம்.சாண்ட் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
-
காற்றாடும் ஓசூர் அரசு வணிக வளாகம்: மக்கள் வரிப்பணம் ரூ.19.50 கோடி வீண்
-
விசா விதிகளை கடுமையாக்கியது அமெரிக்கா; இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு