இரவு நேர கெடுபிடிகளால் ஓட்டல் உரிமையாளர்கள் தவிப்பு

ஆண்டிபட்டி, ஜூலை 18-

ஆண்டிபட்டியில் சில நாட்களுக்கு முன்பு வரை நள்ளிரவு 12:00 மணி வரையும் கடைகள் செயல்பட்டது. இரவு பணியில் இருப்பவர்களின் வசதிக்காக இரவு முழுவதும் சில பேக்கரிகள், டீக்கடைகள் செயல்பட்டன. கடந்த சில நாட்களாக இரவு 11:00 மணிக்குள் கடைகளை பூட்டிச்செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் இரவு 10:00 மணிக்கு முன்பே கடைகளை முடிக்கும் நிலை ஏற்படுகிறது. இரவு 10:00 மணிக்கு வெளியூர்களில் குடும்பத்துடன் சிலர் உணவருந்த வரும்போது சற்று தாமதம் ஏற்பட்டாலும் போலீசார் கறாராக நடந்து கொள்கின்றனர். இதனால் தயார் செய்து வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வீணாகி தினமும் நஷ்டம் ஏற்படுகிறது. தங்களின் பிரச்னை குறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அரசின் கவனத்திற்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஓட்டல் உரிமையாளர்கள் அன்றாடம் இரவில் பதட்டத்துடன் கடைகளை பூட்டும் நிலை ஏற்படுகிறது. இரவு நேர கெடுபிடிகளில் போலீசார் தளர்வு காட்ட வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement