கம்பமெட்டு ரோடு இன்று திறப்பு
கம்பம், ஜுலை 18
கம்பமெட்டு மலை ரோடு 13 கி.மீ. தூரம் கொண்டது. இதில் 7 கி.மீ., மலை ரோடாகும். கடைசி 4 கி.மீ. ரோடு பராமரிப்பிற்கென தமிழக அரசு 2005 ல் ரூ.4 கோடி நிதி ஒதுக்கியது. அதில் 65 மீ.,நீளத்திற்கு மழை நீர் வடிகால் மற்றும் ஆர்.சி.சி. ரோடு அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த 40 நாட்களாக போக்குவரத்தை நிறுத்தி இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்து இன்று ( ஜூலை 18 ) காலை போக்குவரத்திற்கு திறக்கப்படுவதாக கோட்ட பொறியாளர் குமணன் தெரிவித்துள்ளார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement