கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனி, ஜூலை 18–தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் வைத்திநாதன் திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 க்கான சுய கணக்கெடுப்பு இணையதளம் https:\se.census.gov.in ல் தங்கள் விபரங்களை பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும் .இதற்காக சந்தேகங்கள் ஏற்பட்டால் 1855 அல்லது 04546 255 404 என்ற தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement