தனியார் கல்லுாரி பஸ்சில் தீ

கரூர்:கரூர் அருகே, தனியார் கல்லுாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில், புகையுடன் கூடிய தீ ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கோடங்கிப்பட்டியில், தனியாருக்கு சொந்தமான மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரி வளாகத்தில், நேற்று இரவு மூன்று பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு பஸ்சில் திடீரென புகையுடன் கூடிய சிறிய அளவில் தீ பிடித்தது. அப்போது, அருகில் இருந்த கல்லுாரி ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் தீயை அணைக்க சென்ற, தீயணைப்பு வீரர்கள் திரும்பினர். பலத்த காற்று காரணமாக, பஸ்சில்
இருந்த பேட்டரியில், ஒயர்களிடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ ஏற்பட்டது தெரிய வந்தது.

Advertisement