விசா விதிகளை கடுமையாக்கியது அமெரிக்கா; இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு
வாஷிங்டன்: விசா விதிகளில் அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
உயர் கல்விக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் தங்கி படிக்கும் சர்வதேச மாணவர்களில், 31 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அங்கு உயர்கல்வி பயின்று வரும் மற்றும் பயில திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்கால கனவிலும், வேலைவாய்ப்பு திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசா மாற்றங்களை செய்துள்ளது.
மேலும், கலாசாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்லும் எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் விசா, பத்திரிகையாளர் விசாவிலும் பல மாற்றங்களை செய்துள்ளது. 1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முழுதும், முறையான அரசு கண்காணிப்பு இல்லாமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின்படி, மாணவர்களும், கலாசார பார்வையாளர்களும், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். மேலும் படிப்பை முடித்த பின், வேறு கல்லுாரிக்கு மாற அல்லது நாட்டை விட்டு வெளியேற, 60 நாட்கள் அவகாசம் இருந்தது. அது இனி, 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு, 240 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீன குடிமக்களுக்கு இந்த காலக்கெடு மேலும் குறைக்கப்பட்டு, 90 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீளும் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது கல்வியைத் தொடர புதிய அனுமதி அல்லது விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
@block_B@
அமெரிக்க அரசின் இலவச மருத்துவ காப்பீடான, 'மெடிகேட்' , இலவச உணவு உதவி திட்டமான, 'புட் ஸ்டாம்ப்' மற்றும் வீட்டுவசதி மானியங்களை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு இனி, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை மறுக்கப்படலாம் என, கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினர் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பொருளாதாரத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உழைக்கும் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நலத்திட்டங்களை நம்பி, அவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கக் கூடாது. இந்த அடிப்படை கொள்கையை நிலைநாட்டவே இந்த விதி மீண்டும் கொண்டு வரப்படுகிறது என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.block_B
பல வளர்ந்த நாடுகளில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் முழுக்கட்டணம் செலுத்தும் வெளிநாட்டினரின் கொடுக்கும் கட்டணத்தை நம்பியே நடத்தப்படுகின்றன. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் எம்டி படிக்க வெளிநாட்டினர் கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 5 லட்சம் டாலர் உள்நாட்டினர் என்றால் இது 48000 மட்டுமே - அதுவும் கூட வட்டியில்லா கடனாக வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவிலும் கூட இதே நிலைமைதான். இனி கல்வி நிறுவனங்கள் அரசின் தயவில் இயங்கும் பொழுது நொடித்துப்போக அல்லது தனது ஆய்வு செய்யும் திறனில் பின்தங்கி விட வாய்ப்புண்டு.
இவ்வளவு கெடுபுடி இருந்தும் இந்தியா நாட்டு மாணவர்கள் அங்கே படிக்க செல்ல வேண்டுமா?
சூப்பர் சரியான ஆப்பு
நல்ல திட்டங்கள்தானே கொண்டுவந்துள்ளார்கள்...இனியும் அவர்களை ஏமாற்றும் வேலை நடக்காது போல... திருட்டுத்தனங்களை ஒழிக்க வேண்டியதாக உள்ளது மிக முக்கியம் அவர்களுக்கு ஆனால் இது இந்தியாவில் நடக்காது. திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
டிரம்ப் ஆட்டம் முடியும் ., விடிவு காலம் பிறக்கும் ..