மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நத்தம், ஜூலை 18
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடு, வீட்டு வகைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் ஜூலை 30 வரை நடக்கிறது. இதையொட்டி நத்தம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத் தலைமை வகித்தார். அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் திருமகள் முன்னிலை வகித்தார். தாசில்தார் டேனியல் பிரேம்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
செந்துறை பிரிவு பகுதியில் துவங்கி மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக சென்று யூனியன் அலுவலகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பழநி: பழநி வருவாய்த்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு தாசில்தார் மங்களபாண்டியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் உழவர் சந்தையில் துவங்கி திருவள்ளுவர் சாலை, ரெட் கிராஸ் ரோடு, ஆர்.எப்., ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.