தெருநாய்களுக்கு உணவளிக்க 39 தெருக்கள் மாநகராட்சி பட்டியல் வெளியீடு

சென்னை: தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 39 தெருக்களின் பட்டியலை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாய்க்கடி மற்றும் ரேபிஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவற்றுக்கு தனி இடங்களில் உணவளிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்யும் பணி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது முதற்கட்டமாக, 39 தெருக்களின் விபரங்கள், மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இதுகுறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தெருக்களை தேர்வு செய்வதற்கு முன், அப்பகுதிமக்களிடம் கருத்து கேட்டு, ஆட்சேபனை இல்லை என்பதை மாநகராட்சி உறுதி செய்தது. சில இடங்களில் அதிருப்தி தெரிவித்தவர்களிடமும் பேசி ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், இந்த 39 தெருக்கள் மட்டுமே இறுதியானவை அல்ல, கூடுதல் இடங்கள் தேர்வு செய்யப்படும்.

தெருவின் அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நோட்டீஸ்' சென்னையில் விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்து அகற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள் குறித்து, ரிப்பன் மாளிகையில் நேற்று, மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு நடத்தினார்.

அப்போது, 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 4,000 விதிமீறல் கட்டடங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 471 கட்டடங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

500 விதிமீறல் கட்டடங்களுக்கு 'லாக் அண்டு சீல் - நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மற்றவை பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

'அம்மா' உணவக வருவாய் உயர்வு

சென்னையில் உள்ள, 383 அம்மா உணவகங்களை மேம்படுத்தி, தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக, ஏப்., மாதத்தில், 67,164 பேர் தினசரி உணவு அருந்தி வந்த நிலையில், தற்போது, ஒரு லட்சத்து, 4,102 பேர் உணவு அருந்துகின்றனர். இவற்றால், 87.60 லட்சம் ரூபாயாக இருந்த மாத வருவாய், 1.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

@block_B@ 500 விதிமீறல் கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' சென்னையில் விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்து அகற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள் குறித்து, ரிப்பன் மாளிகையில் நேற்று, மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு நடத்தினார். அப்போது, 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 4,000 விதிமீறல் கட்டடங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 471 கட்டடங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. 500 விதிமீறல் கட்டடங்களுக்கு 'லாக் அண்டு சீல் - நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மற்றவை பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.block_B

Advertisement