தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு தோட்டக்கலைதுறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில், நேற்று உழவர் அலுவலர் திட்டம் 2.0 திட்டத்தை கைவிட கோரி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பாலகுமார் பேசியதாவது:

உழவர் அலுவலர் திட்டம் 2.0 தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும், தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, நடைமுறையில் இருந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement