காஸ் லாரி மீது கார் மோதி விபத்து; மூன்று பேர் பலி

1

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செங்கப்பள்ளி அருகே சுற்றுலா பயணிகள் கார், முன் சென்ற காஸ் லாரி மீது மோதியதில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செங்கப்பள்ளி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய கார், முன்னே சென்ற காஸ் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், தம்பதி உட்பட, மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.
குழந்தை உட்பட, ஐந்து பேர் காயமடைந்தனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த வாரம் இதே ஊத்துக்குளியில் கார் விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement