ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு; இன்றைய நிலவரம் இதோ!
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (ஜூலை 16) ஆபரண தங்கம் கிராம், 13,150 ரூபாய்க்கும், சவரன், 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது .
வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 17) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ஐந்து ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூலை 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை மாற்றமின்றி இன்று ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
போட்டோவில் நகை போட்டு அழகு பார்க்கும் பெண்ணே, அந்த நகையை பார்த்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும், இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் நீங்கள் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டுவிடுவார்கள்.
ஏன்னா அவங்க டிசைன் அப்படி ?
வார இறுதியில் தங்கம் விலை கூடுவதை வழக்கமாக வைத்துள்ளதுமேலும்
-
கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
-
கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
-
தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
-
கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு
-
வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்