ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்; நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

12



நமது நிருபர்




தவெக பதவியேற்ற பிறகு முதல் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் மரிய வில்சன் கூறியதாவது: கடந்த 16 நாட்களாக முதல்வர் விஜய் எல்லா துறை ரீதியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலாசனை கூட்டம் நடத்தி இருக்கிறது. தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் செலவிட்டு ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லப்படியாக நடந்து முடிந்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நல்லப்படியாக தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 100 சதவீதம் எல்லோரும் வரவேற்கிறார்கள்.

கடந்த 55 நாட்களாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறை ரீதியாக நாங்கள் பார்த்து கொண்டு தான் வருகிறோம். சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்கும் போது நீங்களும் வரவேற்று தெரியுங்கள். சந்தோஷமாக இருப்போம். இவ்வாறு நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

Advertisement