மது விற்றவர் கைது

பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோமாக மது விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, நேற்று மாலை காமராஜ் நகர் பகுதி யில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரவி, 43, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை கைது செய்து, இவரிடம் இருந்து, 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement