மின் ஒப்பந்த ஊழியர்கள் 2ம் முறை ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையம்:ஒட்டமெத்தை பகுதியில் மின் ஒப்பந்த ஊழியர்கள், நேற்று இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில், நேற்று, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நிரந்தரப்படுத்தக்கோரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பின், மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பள்ளிப் பாளையம், குமாரபாளையம்,
எஸ்.பி.பி., காலனி, வெப்படை, அக்ரஹாரம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே, கடந்த, 14ல் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த, 20 நாட்களாக ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement