பழநி மடம் நிலம் மோசடி வழக்கு: தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சல்லடை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக பழநி முருகன் கோயில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.
ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த நிலம் கடந்த ஆண்டு பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஜூலை 6-ல் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் இருவருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழநி கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியாக பழநி நிலை-1 சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் அதிகாலை 4:00 மணி முதல் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். கிரையம் பெற்றவரில் ஒருவரான, மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பழநி மடம் நிலம் மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கோவில் நிலத்தை எப்படி மூன்றாம் நபருக்கு கிரயம் செய்ததாக பதிவு செய்ய முடியும்? கோவில் சார்பாக யார் கையெழுத்து போட்டார்கள்? இல்லை நிலத்தை முன்னரே வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்து விட்டு இப்பொழுது மூன்றாம் நபருக்கு விற்கிறாரா? இந்நேரம் இந்து அறநிலையத்துறையை கோவிலில் இருந்து வெளியேற்ற ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருக்கவேண்டும். இந்துக்களுக்கு சொரணை வேண்டும்.
பழநி அடிவாரம். அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம். நிலத்திற்கு தக்கார் இணை ஆணையர். வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட, ஜூலை 6-ல் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் 100 கோடி நிலம் இரு நபருக்கு ரூ.2 கோடிக்கு கிரயம் பத்திரம். அறக்கட்டளை நிலம் விற்க முடியுமா? சிறுபான்மை, திராவிடர் அறக்கட்டளை நிலத்தை பதிய முடியுமா?பத்திர பதிவில் எவ்வளவு பெரிய மோசடியும் நடக்கும் என்பதற்கு சிறு உதாரணம். தமிழக பத்திரம் நம்பி தனியார், தேசிய வங்கிகள் கடன் பார்த்து கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் பத்திர பதிவு முழுவதும் ரத்து செய்து, உண்மை ஆவணங்கள் மூலம் மறு பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு மோசடி.
பத்திர பதிவுக்கு கட்டாயமாக கொடுக்கவேண்டிய விற்றவர் , வாங்கியவர் , இவர்களின் விலாசங்கள், அப்பா பெயர் புகைப்படஎம் , ஆதார், மொபைல் எண், இடது கைவிரல் ரேகை இப்படி எதுவுமே இல்லாமல் நடைபெற்ற முதல் பத்திரப்பதிவுபோல் தெரிகிறது.
அதனால் தான் போலீசார் இப்படி சல்லடையை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள் என தோன்றுகிறது. எனவே தற்சமயம் கைது என்ற வார்த்தையை பேசமுடியாது.
வித்தவன் யாரு, வாங்குனவன் யாரு, புரோக்கர் யாரு, ஆதரவு யாரு, அரசியல்வாதி, அதிகாரி ன்னு சம்பந்தப்பட்டவானுங்க எல்லார் பெயரும் தெரியும்.. ஆனா மக்களுக்கு தெரியக்கூடாது
நிலத் தரகர் திமுக புள்ளின்னு இப்போ தகவல் வந்திருக்காம். சிபிசிஐடி சோதனை எல்லாம் அவுக வீட்டுல நடக்குதாம்.
கடைசியாக கண்டிப்பாக திருட்டு பயலுக தண்டனை அனுபவிப்பார்கள்..
வாங்கியது யார் ?? அவரிடம் விசாரணை நடைபெற்றதா ??
ஹிந்து அறநிலை துறையில் எப்படி மாற்று மதத்தினர் பணியில் இருக்கிறார்கல். ஜாஸ்டீன் என்பவர் யார் ?
இந்த ஜஸ்டின் பத்திரப்பதிவு துறை அதிகாரி ..MGR பாதுகாப்பில் ஜஸ்டின் என்று சண்டைபயிற்சியாளர் இருந்தார்
எம்புட்டு பெரிய வாளி, அறிவாளி நீயீ.
ஆனால் பாருங்க யார் அந்த நிலத்தை வாங்கினார் ஏன் அவர்களை இன்னும் கைது செய்யவில்லை ரைய்டு போகவில்லை யாரை இந்த அரசு காப்பாட்றுகின்றது
சல்லடை ?மேலும்
-
கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
-
கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
-
தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
-
கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு
-
வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்