தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்

25

சென்னை: தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட அண்ணாதுரை சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழகம் உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.



@block_G@

இந்நாள் மகிழ்ச்சி!

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.

அண்ணாதுரை 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_G


சிறப்பு வீடியோ!

தமிழ்நாடு நாள் இனி 2 முறை கொண்டாட்டம்; முதல்வர் விஜய் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement