வெள்ளை யானையில் எழுந்தருளிய சுந்தரர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரும் அவரது நண்பர் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்ற தெய்வீக வரலாற்றை நினைவுகூரும் வகையில், குருபூஜை விழா, ஆடி மாதம் - சுவாதி நட்சத்திரத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.

அதன்படி, ஜூலை 22 சுந்தரர் குருபூஜையையொட்டி, பால், பன்னீர், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால், அபிஷேகம் நடைபெற்றது. இரவு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளிய, உற்சவர் சுந்தரர், நான்கு மாடவீதியில் உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement