‘புதிய ஓய்வூதியத்துக்கான வழிமுறைகள் வகுக்கணும்’

கோவை: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் கூட்டம், கீதா ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் சங்க துணைத்தலைவர் நாகநாதன் தலைமையில் நடந்தது.

சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:  

ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் உரிமை. ஓய்வூதியர்களுக்கு அது சமூக பாதுகாப்பை அளிக்கிறது. மத்திய அரசு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

பழைய ஓய்வூதிய திட்டம்தான் எங்களுக்கு ஏற்புடையது. கடந்த ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வழிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. த.வெ.க. அரசு விதிகளை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு, ரூ.25 லட்சமாக உயர்த்திய பணிக்கொடை தொகை, மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, 12 கோரிக்கைகளை தமிழக அரசு  நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement