தாய் விஷம் கொடுத்து தற்கொலை: மகன் பலி

போடி, ஜூலை 22 -

போடி மேலச்சொக்கநாதபுரம் ராமர் கோயில் தெருவில் பெட்டிகடை நடத்தியவர் காமுத்தாய் 38. கணவர் ராஜா 46. கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 16 வயது மகள், 14 வயது மகன் இருந்தனர். கணவர் ராஜா 10 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதில் மனமுடைந்த காமுத்தாய் நான்கு நாட்களுக்கு முன்பு தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அவரும் விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் காமுத்தாய் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்தார். பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில் மகன் சீனு ஹர்சித் 14, சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மகள் சிகிச்சை பெற்று வருகிறார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement