பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் பணிகள் நிறுத்தம்:உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிப்பு
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ரூ. 14.7 கோடி மதிப்பில், நடந்து வரும் மேம்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், 3 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், சர்வதேச அளவில் இந்த சுற்றுலா மையம் பிரசித்தி பெற்றது.
இதனால், இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து, செல்கின்றனர். பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறன்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, ரூ. 14.7 கோடி மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணி இங்கு, நடந்து வந்தது.
குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைபாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த பணிகள் துரிதமாக நடந்தது. பிச்சாவரம் சுற்றுலா வளாக ஒரு பகுதியில் தற்போது, கார் பார்க்கிங் வசதி பணி முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தற்போது இந்த மேம்பாடடு பணிகள் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு, வருகின்றனர். எனவே, மேம்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
@block_B@
பிச்சாவரத்தில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தற்போது 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில், வழக்கத்தைவிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்குவருகின்றனர்.போதுமான படகு வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செல்ல வேண்டி உள்ளது. மேலும், படகுகள் கிடைக்காமல் வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கூடுதல் படகுகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். block_B
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்