ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி

பொள்ளாச்சி: குடிநீர் குழாய் உடைப்புக்காக தோண்டப்பட்ட, பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, பிரதான குடிநீர் குழாய்  உடைப்பு ஏற்பட்டு நீர் விரயமாகியது. இதையடுத்து, அதிகாரிகள், குடிநீர் நிறுத்தம் செய்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

மக்கள் கூறுகையில், ‘பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட ரோடு, சீரமைக்கப்படாமல் உள்ளது. அங்கு வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் அவ்வழியாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அங்கு, கற்கள் சிதறிக்கிடப்பதால் விபத்துகளும் ஏற்படுகிறது. சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட பின், முறையாக ரோட்டில் பேட்ச் ஒர்க் செய்தால், பயனாக இருக்கும். எனவே, இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement