அரசு பொறியியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 

விழுப்புரம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு குழு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உடற்கல்வி உதவி இயக்குநர் மணிவண்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்து பேசினார். அப்போது, தம் உயிரையும், பிறர் உயிரையும் பாதுகாக்கும் விதத்தில் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். விழிப்போடு வாகனங்களை இயக்கும் பண்பை மாணவர்கள் பெற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஹேமலதா, ‘சாலை விபத்துகள் பெரும்பாலும் மக்களின் அலட்சியத்தால் நடக்கிறது, அதிவேக இயக்கம், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவதால் தான் பெரும்பாலும் விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து விதிகளை பின்பற்றினால், விபத்துகளை தவிர்க்கலாம்’ என்றார்.

நெடுஞ்சாலை கோட்ட உதவி பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் திவ்யா முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement