வரதட்சணைக்காக கர்ப்பிணி கொடுமை :கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
வில்லியனுார்: வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த வி.மணவெளியை சேர்ந்தவர் சிந்தாமணி,30; இவருக்கு கடந்த 2019ல் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் கார்த்தி,35; என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சிந்தாமணிக்கு இரு முறை கருவுற்று, அபாஷனாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் சிந்தாமணி கர்ப்பமடைந்தார். 5 மாதம் கர்ப்பிணியாக உள்ள சிந்தாமணி, கார்த்தியிடம் சாப்பிட பழம் வாங்கி தருமாறு கேட்டார்.
அதற்கு அவர், 5 சவரன் நகையை, வரதட்சணையாக வாங்கி வந்தால், பழங்கள் வாங்கி தருவதாகவும், தற்போது குழந்தை வேண்டாம் எனக்கூறி, கருவை கலைத்துவிடுமாறு கூறி, சிந்தாமணியை அடித்து துன்புறுத்தினார். மேலும், கார்த்தி குடும்பத்தினரும், சிந்தாமணியை துன்புறுத்தினர்.
இதுகுறித்து சிந்தாமணி, கடந்த 3ம் தேதி வில்லியனுார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கார்த்தி, மாமனார் வைத்திலிங்கம், மாமியார் சாந்தி, நாத்தனார்கள் ஆனந்தி மற்றும் கவிதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ம.பி., கோட்டையில் 400 ஆண்டு பழமையான பீரங்கி திருட்டு: தேடும் பணி ராஜஸ்தானில் தீவிரம்
-
டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்
-
மானிய தொகை: நெசவாளர்கள் மனு
-
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்
-
ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் வன மகா உற்சவம்
-
அய்யப்பன் கோவிலில் பகவதி அம்மனுக்கு பூஜை