8 ஆண்டுகளுக்கு பின் நடந்த திருப்புவனம் வாரச்சந்தை ஏலம்

திருப்புவனம்:எட்டு ஆண்டுகளுக்கு பின் திருப்புவனம் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது.

திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை ஆடு, கோழி சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் மறுநாள் புதன்கிழமை மாட்டுச்சந்தையும் நடைபெறும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்ய தனியாரிடம் வருடத்திற்கு 22 லட்ச ருபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதன்பின் பேரூராட்சி நிர்வாகமே வசூல் செய்தும் போதிய வருவாய் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நேற்று 7 ஒப்பந்தகாரர்கள் 20 லட்ச ரூபாய் டெபாசிட் செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். இறுதியில் 29 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஒரு வருடத்திற்கு ஒப்பந்தகாரர் அரசு விதிகளை பின்பற்றி வியாபாரிகளிடம் கட்டணம் வசூலித்து கொள்ளலாம்.

அதன்பின் மதியம் தினசரி சந்தைக்கு 10 லட்ச ரூபாய் டெபாசிட் செலுத்தி 7 ஒப்பந்தகாரர்கள் பங்கேற்றனர். இறுதியில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. வாரச்சந்தை, தினசரி சந்தை இரண்டையும் மதுரை கீரைத்துறையை சேர்ந்த மணிமுருகன் என்பவர் ஏலம் எடுத்தார்.திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அன்னலெட்சுமி தலைமையில் ஏலம் நடந்தது.

Advertisement