3 வாக்குறுதிகளும் தோல்வி; நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் கருத்து

5

சென்னை: 3 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நீட் தேர்வால் உறுதி செய்ய முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரித்தார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வின் பிரச்னை நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியானது; நீட் தேர்வை நீக்க வேண்டிய நேரம் இது. நீட் மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமையைக் குறைத்தல், வணிகமயமாக்கலை ஒழித்தல், மற்றும் தரத்தை மேம்படுத்துதல். 3 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நீட் தேர்வால் உறுதி செய்ய முடியவில்லை.

அது கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசு விழித்தெழ வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement